சப்போட்டா பழத்தின் நன்மைகள் !!

by Column Editor
0 comment

சப்போட்டாவில் உள்ள டானின்கள் பாலிபினால்கள் குடலில் அமிலச் சுரப்பை நடுநிலையாக்குகிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடல் எரிச்சலை தனிக்கின்றன.

இரைப்பை அழற்சி மற்றும் பிற குடல் தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இதில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.

சப்போட்டா பழத்தின் நன்மைகள் அதிலுள்ள ஊட்ட சத்துக்களில் அடங்கியுள்ளன. சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தாது சத்துக்கள் எலும்பை வலுப்படுத்த உதவுகின்றன.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிடுவது எலும்பின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் தாமிர சத்தின் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சப்போட்டா பழத்தில் உள்ள தாமிர சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

Related Posts

Leave a Comment