உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க சூப்பரான 5 டிப்ஸ்கள்இதோ…

by Column Editor
0 comment

சருமத்தை புத்துணர்ச்சியுடனும், நீரேற்றமாகவும் வைத்திருக்க சுகாதார நிபுணர்கள் கொடுத்துள்ள சில குறிப்புகளை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்…

தோல் உடலை மூடி பாதுகாக்கும் கவசமாக விளங்குகிறது. ஆனால் நம்மில் பலரும் இவ்வளவு முக்கியமான சருமத்தை பராமரிப்பது கிடையாது. அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் சருமம் பொலிவுடன் இருப்பது அவசியம். சூரிய ஒளி, புகை, மாறி வரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை சருமத்தை கடுமையாக பாதிக்கிறது. கொரோனா தொற்றின் போது எப்படி நோய் வந்துவிடக்கூடாது என்பதற்காக நம்மை பாதுகாத்துக்கொண்டோமோ அதே அளவு அக்கறையை சரும பராமரிப்பிலும் காண்பிக்க வேண்டும். தெளிவான மற்றும் இளமை சருமத்திற்கு இந்த எளிமையான 5 ஸ்டெப்புகளை தினமும் பின்பற்றுங்கள்.

இரண்டு வேளை சுத்தம் செய்வது:

நாள் முழுவதும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் சருமத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் நாள் முழுவதும் சுற்றியுள்ள மாசுக்கள் சரும துளைகளை அடைத்து முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளை கொடுக்க வாய்புள்ளதால், தினந்தோறும் இரண்டு முறை முகத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும். சரும வகைக்கு ஏற்ற க்ளென்சர்களைக் கொண்டு அடிக்கடி முகத்தை கழுவுவது, சருமத்தில் துளைகள், வெடிப்புகள், சுருக்கங்கள், வயதான தோற்றம் ஆகியவை ஏற்படுவதை தடுக்க உதவும்.

எக்ஸ்போலியேட்:

மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை ஜொலிக்க வைக்க எக்ஸ்போலியேட் எனப்படும் தோல் சுத்தப்படுத்தும் செயல்முறை கைகொடுக்கிறது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு ஒருமுறை சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது, தடிமனை குறைப்பதோடு, ஃபேஸ் மாஸ்க், ஃபேஷியல், க்ரீம்கள் போன்றவற்றின் நன்மைகளை சருமம் உறிஞ்சிக்கொள்ளவும் உதவுகிறது.

சீரம் பயன்பாடு:

முகத்தை நன்றாக கழுவி, எக்ஸ்போலியேட் செய்த பிறகு உங்கள் சரும வகைக்கு ஏற்ற சீரத்தை தடவுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சீரத்தில் நிறைந்துள்ள சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சருமத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்கும். கெமிக்கல் பயன்பாடு இல்லாத, கற்றாழை, வேம்பு போன்ற இயற்கை மூலப்பொருட்கள் அடங்கிய ஆர்கானிக் சீரம்களை பயன்படுவது மிகவும் நல்லது.

மாய்ஸ்சரைசர் கொண்டு நீரேற்றம்:

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இதற்கு க்ரீம் அல்லது ஜெல் வடிவிலான மாய்ஸ்சரைசரை தடவலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் க்ரீம் மாய்ஸ்சரைசர்களையும், எண்ணெய் சருமம் கொண்டவர்கள் ஜெல் வடிவிலான மாய்ஸ்சரைசர்களையும் பயன்படுத்தலாம். இவை சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுகிறது.

சன்ஸ்கிரீன் பூச மறக்காதீர்கள்:

சருமத்தில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படு சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால், சன்ஸ்கிரீன் பூசுவதை மறக்க கூடாது. உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு குறைந்தது இருபது நிமிடங்களுக்கு முன், தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள SPF 30 முதல் 50 வரையிலான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்னதாக SPF 30 முதல் 50 வரையிலான சன்ஸ்கிரீனைப் பூசிக்கொள்ளவது சிறப்பான பலன் கொடுக்கும்.

Related Posts

Leave a Comment