சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

by Column Editor
0 comment

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவையொட்டி | சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
* அந்த வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஈ.வெ.ரா., சாலை வழியாக செல்லலாம்
* பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ள முத்தையா சாலை மற்றும் ஈ.வெ.ரா., சாலை, மத்தியச் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், தேவை ஏற்பட்டால், மதியம் 1:00 மணியில் இருந்து, சூளை நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

* ஈ.வி.கே சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது
* வணிக ரீதியான வாகனங்கள் ஈ.வெ.ரா., சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது

* பாரிமுனையில் இருந்து வருகின்ற வாகனங்கள் குறளகம், தங்கச் சாலை, வால் டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்
* இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று, தங்கள் வழித்தடங்களை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment