விடிய விடிய மழை – குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை!

by Column Editor
0 comment

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் பெருக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் நன்றாக உள்ளதால் மெயின் அருவி ஐந்தருவி ,பழைய குற்றாலம் உள்ளிட்ட கருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தொடர் கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அருவிக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளே யாரும் செல்ல முடியாத அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 6ம் தேதி நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment