இன்றைய ராசிபலன்(09-08-2022)…

by Column Editor
0 comment

மேஷம்:

இன்று உங்கள் அனைத்து வேலைகளும் சிறப்பாக செய்து முடித்து, மற்றவர்களின் நம்பிக்கையையும், லாபமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் கடினமான காரியங்கள் எளிதாகும். இன்று நீங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றியைப் பெறுவார்கள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பல வழிகளில் நல்ல தகவல்களைப் பெறுவீர்கள், இதனால் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சில புதிய முடிவுகள் எடுpபீர்கள். தொழில் துறையில் சிறப்பாக செயல்படுவீர்கள். தந்தையின் உதவியால் உங்களின் பணி முடியும். வேலையில் சக ஊழியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து நிம்மதி கொள்ளுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பெறுவீர்கள். இது எந்த ஒரு கடினமன சூழ்நிலையிலிருந்தும் மேம்படுத்தும். பெண்கள் தங்கள் தொழிலைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பீர்கள். சொத்து வாங்குவதற்கு மிகவும் சாதகமான நாள். ஆனால் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.

கடகம்:

பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் ஆளுமை சிறப்பாக இருக்கும். பணிகளை திறனுடன், புரிந்துணர்வுடன் செய்து பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் கருத்துக்களை முன்வைக்க இதுவே சிறந்த நாள். வணிகத்தில் பெரிய ஒப்பந்தம், ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு சிறப்பான நாளாக இருக்கும். மற்றவர்களிடம் உங்களின் கருத்தை திணிக்காதீர்கள். வேலையில், பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பொருளாதார மேம்பாடு அடைய புதிய திறமைகளை கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கும். உங்களின் கடின உழைப்பினால் வணிகத்தில் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது. குடும்பம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இன்று முக்கிய நாளாக இருக்கும். ஜவுளி மற்றும் உலோகத் தொழில்கள் இன்று நல்ல லாபம் தரும். எதிர்காலத்தை மனதில் வைத்து எந்த முதலீட்டையும் செய்யுங்கள். மாமியாருடன் ஒற்றுமை மேம்படும். உறவுகள் வலுவடையும். எந்த ஒரு பொறுப்பான வேலையையும் அலட்சியமாக செய்யாதீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்கு இன்று வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்க விதிகளால் வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் புதிய நண்பர்களை உருவாக்க முடியும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இன்று அதிக உழைப்பு தேவைப்படும்.

​விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு பல மூலங்களிலிருந்து பண வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக புதிய திட்டங்களின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்கள் உயர்க்கல்விக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய திட்டமிடலுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் சிறப்பான பலனைத் தரும்.

​தனுசு:

தனுசு ராசியினரின் நேர்மறையான எண்ணங்கள் உங்கள் குடும்பத்தையும், பணியிடத்தையும் மகிழ்ச்சியாக மாற்றும். வங்கித் துறையினருக்கு உத்தியோகத்தில் லாபம் தரும் காலமாகும். நிலுவையில் இருந்த பணம், சொத்து பேரம் மூலம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளால் மனதுக்கு திருப்தி கிடைக்கும். மனைவியுடன் சேர்ந்து எதிர்காலம் குறித்த சில திட்டங்களை தீட்டுவீர்கள்.

​மகரம்:

கடவுள் அருளால் இன்று உங்களுக்கு பல காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையின் உதவியால் சொத்து சேரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைவீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் நிதி நிலைமை மோசமடையலாம். எந்த ஒரு வேலையையும் தாமதப்படுத்தாமல் செய்து முடிப்பது நல்லது.

​கும்பம்:

இன்று காலை முதல் நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உங்கள் சிந்தனை அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் பெறலாம். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள், கடின உழைப்பால் நல்ல பலன் கிடைக்கும்.

​மீனம்:

மீன ராசியினர் இன்று புதிய பணிகளில் ஆர்வம் காட்டுவார்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் ஆற்றல் மற்றும் தைரியத்தின் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். இளைஞர்கள் தொழில் தொடர்பான புதிய தகவல்கள், வாய்ப்புகளைப் பெறுவார்கள். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளால் மட்டுமே சர்ச்சைகள் எழலாம், எனவே கடந்த கால மோசமான விஷயங்களைப் புறக்கணித்து முன்னேறுங்கள்.

Related Posts

Leave a Comment