வார ராசிபலன் 8 முதல் 14 ஆகஸ்ட் 2022 வரை – சுப மங்கல யோகம் ஏற்படும் ராசிகள்…

by Column Editor
0 comment

மேஷம்:

இந்த வாரம் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்வது நல்லது. தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் முதலீடு செய்வது நல்லது.வெளிநாடு, வெளியூர் சார்ந்த விஷயங்களும், இறக்குமதி / ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு சில கடினமான நேரமாக இருக்கலாம். பணியில் அழுத்தமும், பணிச்சுமையையும் சந்திக்க வேண்டியது இருக்கும். உங்கள் பெற்றோரிடம் ஆசி பெறுவது நல்லது.

​ரிஷபம்:

ரிஷப ராசியினர் எந்த ஒரு செயலை கையில் எடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்கி மகிழ்வீர்கள்.கல்வியில் மாணர்கள் நல்ல முன்னேற்றம் அடைய சாத்தியமான அமைப்பு இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றும் சமச்சீர் உணவு எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

​மிதுனம்:

மிதுன ராசிக்கு பணியிடத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதற்கான திட்டமிடல் அவசியம். பணியிடத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பணியிடத்தில் சில சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், செழிப்பாக இருக்கும். உங்கள் வேலை மற்றும் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று செய்வது நல்லது.

கடகம்:

கடக ராசிக்கு சாதகமான சில முக்கிய விஷயங்கள் நடக்கும். சிந்தனை சிறப்பாக இருந்தாலும், அகந்தை மேலோங்கும் என்பதால் கவனமாக பேசுவதும், பழகுவதும் நல்லது.சில நிதி சிக்கல்களை இந்த வாரம் சந்திக்க நேரிடும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவு எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பத்துடன் செயல்படுங்கள். சோம்பேறித்தனத்தை விலக்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவது அவசியம்.

​சிம்மம்:

இந்த வாரம் சிம்ம ராசிக்கு பெரியளவில் நிதி முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும். இந்த வாரம் குடும்பத்தில் சில கடுமையான சச்சரவுகள், மோதல்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் துணையுடன் பணம் சார்ந்த சில வாக்குவாதம் ஏற்படும் என்பதால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மன அழுத்தமில்லாமல் வாழ முற்படுங்கள். இந்த வாரம் நீங்கள் பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் காணலாம்.

​கன்னி:

கன்னி ராசிக்கு இந்த வாரம் தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சாதகமாக இருக்கும். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களுக்கு விருப்பமான, தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதனால் மிகவும் நிம்மதியாக உணர ஆரம்பிக்கலாம்.வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் காதல் வாழ்க்கையில் வருத்தம் ஏற்படும். கடினமாக உழைப்பதற்கான வலிமை கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த வாரம் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு பிரச்னைகள் காரணமாக கவலையுடன் இருப்பீர்கள். உங்கள் துணையுடன் மனஸ்தாபத்தால் நெருக்கம் குறையும்.

நீதி தொடர்பான விஷயங்கள் மன வருத்தத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் வாரத்தின் நடுவில் உங்களின் பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். கல்வி முன்னேற்றம் கூடும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் இந்த வாரம் பணியிடத்தில் முன்னேற்றத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். நிதி தொடர்பான விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

உடல் நலனையும், உடல் தகுதியையும் மேம்படுத்திக் கொள்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்த வாரம் சில புதிய முயற்சிகளை, முதலீடுகளை மேற்கொள்ளலாம். வாரத்தின் இறுதியில் சாதகமான பலன்களைப் பெற அதிக வாய்ப்புள்ளது. உங்கள் துணைக்கு சிறிது இடம் கொடுப்பது உங்கள் மண வாழ்க்கையை மேம்படுத்தும்.

​தனுசு:

தனுசு ராசியினர் சிறப்பான வாரமாக அமையும். புதிய தொழில், ஒப்பந்தங்கள் முன்னேற்றம், லாபம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு தகுந்த நல்ல யோசனைகளும், வெற்றியும் கிடைக்கும்.புதிய வாய்ப்புகள் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வணிக ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளையும் நீங்கள் பெற வாய்ப்புள்ளது. தூங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானம் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

​மகரம்:

மகர ராசிக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். உங்களுக்கு புதிய நிதி ஆதாரங்கள், வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறனை மேம்படுத்த சில வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளுக்கு சிலர் புதிய வழிகாட்டுதலை வழங்கலாம்.

குடும்ப வாழ்க்கை சில சிக்கல் ஏற்படலாம். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய மன நிலையில் இருப்பீர்கள். காதல் வாழ்க்கை மேம்படும்.

​கும்பம்:

குமப் ராசியினர் தொழில், வியாபாரத்தில் பலத்த போட்டியை சந்திக்க நேரிடும். மன அழுத்தமான நிலையில் இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் புதிய உறவு, வரன் அமையலாம். நிதி ரீதியாக சில நன்மை உண்டாகலாம். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயணம் மேற்கொள்ளத் திட்டமிடலாம். இந்த வாரம் உற்சாகமாகவும், உத்வேகமாகவும் இருப்பீர்கள். நீங்கள் பணியிடத்தில் மாற்றங்களைக் காணலாம்.

​மீனம்:

மீன ராசியினர் தங்களின் உடல் பிறந்தவர்களின் அன்பு, ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற பொறுமையும், கடின உழைப்பும் தேவைப்படும். இந்த வாரம் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வாரம் சற்று கடினமாகவே இருக்கும். கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்களுக்கு சில நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Posts

Leave a Comment