“கே எல் ராகுல் இல்லாததால் கோலி இடம் மாற்றப்படலாம்…” முன்னாள் வீரர் கருத்து!

by Column Editor
0 comment

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி ஆசியக் கோப்பை தொடரில் இருந்து அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐக்கு விராட் கோஹ்லி சமீபத்தில் ”தான் ஆசியக் கோப்பையில் இருந்து விளையாட தயாராக இருப்பேன்” என்று செய்தியை அனுப்பி உள்ளாராம். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இந்த தொடரில் அதிகளவில் ரன்களைக் குவித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கோலி உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் “அணியில் கே எல் ராகுல் இல்லாததால் பல வீரர்களை தொடக்க வீரராக களமிறக்கி வருகின்றனர். அதனால் ஆசியக் கோப்பையில் கோலியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார். கோலி சிலமுறை டி 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment