பேருந்து பயணக் கட்டணம் 11 தசம் 14 சதவீதத்தினால் குறைக்கப்படுகின்றது …

by Column Editor
0 comment

இன்று(4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து பயணக் கட்டணம் 11 தசம் 14 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறைந்தபட்ச பேருந்த கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment