கருடபஞ்சமி..கோகுலாஷ்டமி..வராஹ ஜெயந்தி – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் விஷேசங்கள்…

by Column Editor
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் திருவாடிப்பூரம், கருடபஞ்சமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பல முக்கிய விழாக்கள் கொண்டாடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பணக்கார கோவிலான திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சம் பேர் வந்து கொண்டு உள்ளனர். பல மணி நேரம் ஏன் பல நாள் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஏழுமலையான் தரிசனம் சில நிமிட நேரம்தான் கிடைக்கிறது என்றாலும் அது பூர்வ புண்ணிய பலன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கு உள்ளது அதன் காரணமாகவே பலரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள்.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியின் போதும் புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் திருவிழாவின் போதும் பல லட்சம் பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளன. இந்த மாதத்தில் நடைபெறும் முக்கிய விழக்களை தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளினார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை நடைபெற உள்ளது. மலையப்பசாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்வது கோடி புண்ணியாமாகும். நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

6ஆம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெறும். 9ஆம் தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம், 11ஆம் தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

12ஆம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல், 15ஆம் தேதி சுதந்திர தினம், 19ஆம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20ஆம் தேதி உறியடி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி பலராமர் ஜெயந்தி, 30ஆம் தேதி வராஹ ஜெயந்தி, 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களே ஏதாவது ஒரு திருவிழா நாளில் திருப்பதி போய் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட திருப்பத்தை எங்களுக்கு தெரிவியுங்கள்.

Related Posts

Leave a Comment