மாரியின் காலில் விழுந்த ஜெகதீஷ்… மாரி சீரியல் அப்டேட்!

by Column Editor
0 comment

சூர்யா மாரியை சந்தித்து எனக்கு இந்த கல்யாணத்தில் துளி கூட விருப்பமில்லை உனக்கும் எனக்கும் சுத்தமாக செட் ஆகாது. நான் வெளிநாட்டில் பத்து வருஷம் இருந்திருக்கேன் அங்கு படிச்சிருக்கேன் நீ இந்த ஊர்ல இருக்க ஸ்கூல்ல கூட படிச்சது கிடையாது என சொல்கிறான்.

மாரியின் காலில் விழுந்த ஜெகதீஷ் நடந்தது என்ன? மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. ராதையாக வேடம் போட்டு நடித்த தன் மீது ஸ்ரீஜா ஆரத்தி தட்டை தட்டி விட புடவையில் தீ பற்றியதும் சூர்யா அதனை பால் ஊற்றி அணைத்ததை நினைத்து பூ கட்டிக் கொண்டிருக்கிறாள் மாரி.

இந்த நேரத்தில் கோவிலுக்கு வந்த ஸ்ரீஜா அந்த சூர்யாவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா? கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியா என கேட்க மாரி ஆமாம் என கூறுகிறாள். உன்ன பத்தி உண்மை எல்லாத்தையும் சொல்லிட்டியா என கேட்க என்ன உண்மை என மாரி கேட்கிறாள்.

நீ ஒரு கருணாக்குக்காரி ஊரே உன்னை விரட்டி அடிச்ச விஷயத்தை சொல்லிட்டியா? அத சொல்லாம ஏமாத்தி கல்யாணம் பண்ணினா உண்மை தெரிஞ்சதும் உன்னை கொன்னுடுவாங்க என ஸ்ரீஜா சொல்ல மாரி ஏன் இப்படி எல்லாம் பேசுற என கேட்கிறாள். போய் நீயே உண்மைய சொல்லு இந்த கல்யாணத்தை நிறுத்து. என்ன மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குது பார்க்கிறேன் என சவால் விட்டு செல்கிறாள். இதையெல்லாம் சூர்யா ஒட்டு கேட்கிறான்.

அதன் பின்னர் ஹாஸ்பிடலுக்கு போன சூர்யா தன்னுடைய அப்பா குறித்து விசாரிக்க டாக்டர் இரண்டாவது முறையாக நெஞ்சுவலி வந்துள்ளது. அவரை உஷாராக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு முறை நெஞ்சுவலி வந்தால் அது அவருடைய உயிருக்கே ஆபத்து என சொல்கிறார். இதனால் தன்னுடைய அப்பாவிடம் சென்று நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் மாரியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என வாக்கு கொடுக்கிறான்.

அதன் பிறகு சூர்யா மாரியை சந்தித்து எனக்கு இந்த கல்யாணத்தில் துளி கூட விருப்பமில்லை உனக்கும் எனக்கும் சுத்தமாக செட் ஆகாது. நான் வெளிநாட்டில் பத்து வருஷம் இருந்திருக்கேன் அங்கு படிச்சிருக்கேன் நீ இந்த ஊர்ல இருக்க ஸ்கூல்ல கூட படிச்சது கிடையாது என சொல்கிறான். நான் அப்பாவிடம் இந்த கல்யாணம் புடிக்கல என சொன்னது அவருக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு. அதனால கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன் ஆனா நீ இந்த கல்யாணம் வேண்டாம் என்று அப்பாகிட்ட சொல்லணும். அப்படி இல்லன்னா கல்யாணத்தின் போது நீ இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது தயவு செய்து இந்த சிக்கலில் இருந்து என்னை காப்பாற்று என கேட்டுக்கொள்கிறேன். மாரியும் சரி நான் கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன் என கூறுகிறார்.

அதன்பிறகு மருத்துவமனையில் இருக்கும் ஜெகதீசை சந்தித்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை, என்ன காரணம் என தெரியவில்லை என சொல்ல ஜெகதீஷ் நீ சூர்யாவை கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்கணும். சூர்யா உனக்கு தாலிபாக்கியம் கொடுப்பதற்காக இந்த கல்யாணம் பண்ணிக்க சொல்லல. அவன் உன் கழுத்துல தாலி கட்டினால் தான் உயிரோட இருக்க முடியும் என சூர்யாவுக்கு இருக்கும் ஆபத்து குறித்து சொல்லி கல்யாணத்துக்கு சரி என சொல்ல சொல்லி மாரியின் காலில் விழுகிறார். இதனால் மாரி அதிர்ச்சியடைகிறாள்.

சூர்யாவுக்காக இந்த திருமணத்தை வேண்டாம் என சொல்லப் போகிறாளா அல்லது சூர்யாவின் உயிரை காப்பாற்ற இந்த திருமணத்திற்கு சரியென சொல்லப் போகிறாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment