ஷீரடி சாய் பாபாவின் அற்புத பொன்மொழிகள்..!

by Column Editor
0 comment

என்னிடம் சரணடைந்து விட்ட ஒருவர், தனது எதிர்காலத்தை பற்றியோ, தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை பற்றியோ கவலை கொள்ள கூடாது.

தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.

வீண்கவலை எந்த விதத்திலும் பலன் தராது. மாறாக என் மீது நம்பிக்கை இல்லாமையையே அது காட்டுகிறது. நடப்பது எல்லாமே எனது விருப்பம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

நீங்கள் வேண்டியதையெல்லாம் நான் தருவேன் என்பது தவறான கருத்து. உன்னுடைய கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நான் அறிவேன். ஆனால் என் குழந்தைகளுக்கு எது நன்மையோ அதை மட்டுமே நான் அளிப்பேன்.
கலங்காதிரு பயப்படாதே.

சில வாயிற் கதவை நான் திறந்தேன் உன் மனம் அதை ஏற்க வில்லை என்னை நோக்கி நீ வேண்டுதல் செய்யத் துவங்கிய நேரத்திலேயே உனக்கு பதில் தரும் வேலையை துவங்கி விட்டேன் என்பதையும், அதனால் தான் நீ சோதனைகளை அனுபவிக்கிறாய் என்பதையும் பலமுறை அறிவுறுத்தி வைத்திருக்கிறேன். இப்போது அதை நினைவு படுத்துகிறேன்.

Related Posts

Leave a Comment