அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கார் விபத்தில் பலி! அதிபர் ஜோ பைடன் இரங்கல்…

by Column Editor
0 comment

அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி கார் விபத்தில் பலியானதையடுத்து அதிபர் ஜோ பிடன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
அவருடன் அவரது அலுவலக ஊழியர் இருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 58 வயதான ஜாக்கி வாலோர்ஸ்கி கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரானார். மாநில சட்டமன்ற உறுப்பினர் உள்பட அமெரிக்க அரசியலில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து அதிபர் ஜோ பைடன் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment