இந்தியாவில் 19,893 பேர் பாதிப்பு; 53 பேர் பலி! – கொரோனா நிலவரம்..!

by Column Editor
0 comment

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,40,87,037 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,36,478 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Posts

Leave a Comment