பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு..!

by Column Editor
0 comment

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment