காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கொடுக்க போகும் சர்ப்ரைஸ்..!

by Column Editor
0 comment

காற்றுக்கென்ன வேலி சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.

காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்களுக்கு சீரியல் குழு சர்ப்ரைஸ் தரவுள்ளது. அடுத்த வாரத்தில் காலேஜ் கல்சுரல் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. இதில் வெண்ணிலாவும் கலந்து கொள்கிறார்.

சின்னத்திரையில் ஒவ்வொரு சேனலிலும் குறைந்தபட்சம் 15 சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியல்களுக்கு இடையே பயங்கரமான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமையில் சீரியல்கள் ரசிகர்களின் மனதை கவர்வது பெரிய போராட்டமாக உள்ளது. பிரைம் டைம், ஹீரோ, ஹீரோயின், சீரியல் கதை இப்படி பல காரணங்களை வைத்தே ரசிகர்கள் சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பிப்பார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்த சீரியலில் இடம்பெறும் மாணவி ஆசிரியர் மேல் காதல் வயப்படும் காட்சிகள் தவறான உதாரணமாக உள்ளன என்றெல்லாம் ரசிகர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சீரியல் தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது என்றும் கமென்ட் செய்தனர். ஆனால், எல்லாத் தடைகளையும் மீறி, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் இப்போது தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த கதையின் கரு முழுக்க முழுக்க வெண்ணிலாவை சுற்றி நடப்பதால் அவர் படிப்பது, அவருக்கு துணையாக நாயகன் வழி நிற்பது என கதை கொண்டு செல்லப்படுகிறது.

காற்றுகென்ன வேலி தொடரின் முதலில் நாயகனாக சூர்ய‌ தர்ஷன் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சூர்யா சீரியலில் இருந்து வெளியேறினார், சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சுவாமிநாதன் காற்றுக்கென்ன வேலியில் நாயகனாக நடித்து வருகிறார். இப்போது சுவாமிநாதனை மக்கள் கொண்டாட தொடங்கி விட்டார்கள். சூர்யா – வெண்ணிலா லவ் சீன், கெமிஸ்ட்ரி இணையதளத்தில் பயங்கர வைரல்.

இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு தற்போது இன்னொரு சர்ப்பிரைஸூம் காத்துக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த காலேஜ் கல்சுரல் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. இதில் வெண்ணிலாவும் கலந்து கொள்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.வழக்கம் போல் இந்த போட்டியிலும் அபி எதாவது சதி வேலை செய்து ஜெயிக்க நினைப்பார், அதை உடைத்தெறிந்து வெண்ணிலா ஜெயிப்பார். இதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment