நீங்கள் ப்ளாக் டீ குடிப்பவரா..? உங்களுக்கான குட் நியூஸ்…

by Column Editor
0 comment

தினமும் மூன்று கப் ப்ளாக் டீ குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

நன்மையோ , தீமையோ காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. ஏன் இந்த பழக்கம் என்று கேட்டால் யோசிக்காமல் அவர்கள் சொல்லும் பதில், ”டீ குடித்தால்தான் உடலில் ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது” என்பார்கள். ஆராய்ச்சியின் படி, வெறும் வயிற்றில் பால் கலந்த டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஆனால் பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் ப்ளாக் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. ப்ளாக் டீ மற்ற தேயிலைகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில், கமெலியா அகாசியா என்ற தாவரம் ப்ளாக் டீ தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த தேயிலைகள் இதய ஆரோக்கியம் , தோல் மற்றும் முடி தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும், சரி செய்யும் என்று கூறப்படுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது :

ஸ்டைல்கிரேஸின் கூற்றுப்படி, ப்ளாக் டீ குடிப்பதன் மூலம் இதயம் தொடர்பான ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. ப்ளாக் டீ-யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் பண்புகள் இதயத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது. இதனால் இதயத்தைச் சுற்றியுள்ள தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. தினமும் மூன்று கப் ப்ளாக் டீ குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உங்களுக்கும் தினமும் காலையில் பால் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், இந்த பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இது. உங்கள் தினசரி வழக்கத்தில் ப்ளாக் டீ சேர்த்துப் பாருங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிப்பீர்கள்.

ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் :

ப்ளாக் டீ சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தொடர்ந்து பிளாக் டீ குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.

ப்ளாக் டீ செரிமானத்திற்கும் நன்மை பயக்கும்.

ப்ளாக் டீ உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.

ப்ளாக் டீ சருமத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.

Related Posts

Leave a Comment