சரும சுருக்கத்தை போக்க ஈஸி டிப்ஸ்.!!

by Column Editor
0 comment

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்…

1. முட்டை:

முட்டையின் வெள்ளைக்கருவுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து சரியாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவை அப்படியே பேஸ்ட் பதத்திற்கு வந்திடும். அதை எடுத்து சுருக்கங்கள் இருக்கிற பகுதிகளில் தேய்க்க வேண்டும்.

பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை டயிட்டாக பிடித்துக் கொள்ள உதவிடுகிறது. அதே போல தேங்காய் எண்ணெய் சருமத்தின் வறட்சியை போக்க உதவிடும்.

2. தக்காளி:

ஒரு தக்காளியை மைய அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு வாயின் ஓரங்களில் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து விட்டு மீதமிருப்பதை பேக்காக போட்டுக் கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவிடலாம். இது சருமத்தின் சுருக்கங்களை போக்கிடும்.

சருமத்தில் இருக்கிற செல்களை மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது. தக்காளி ஜூஸ் மட்டுமல்லாது அன்னாசிப் பழச்சாறினையும் நாம் இதற்கு பயன்படுத்தலாம். அன்னாசிப்பழச்சாறினை எடுத்து சரும சுருக்கம் உள்ள இடங்களில் தடவி பத்து நிமிடம் வரை காத்திருந்து கழுவிடலாம்.

3. தேன்:

ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சூடான தண்ணீர் மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சுருக்கங்கள் இருக்கிற பகுதிகளில் தடவி சுமார் பதினைந்து நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் அதன் பின் கழுவிக்கொள்ளலாம்.

பால் பவுடர் மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி சரும சுருக்கங்களை தவிர்க்க முடியும். பால் பவுடர் சருமத்தை சாஃப்டாக்கிடும். தேன் சருமத்திற்கு ஈரப்பதம் நிலைத்திருக்கச் செய்திடும். இரண்டு ஸ்பூன் பால் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.வாயைச் சுற்றி சுருக்கங்கள் உள்ள இடத்தில் அதை அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து அவை காய்ந்ததும் கழுவிடலாம்.

Related Posts

Leave a Comment