2வது டி20 போட்டி: மே.இ.தீவுகள் அணி வெற்றி!

by Column Editor
0 comment

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் எடுத்தார்.,
இந்த நிலையில் 139 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment