செம்பருத்தி வில்லி நந்தினிக்கு என்ன நடந்தது? சீரியல் வெற்றி விழாவில் வெடித்த சர்ச்சை!..

by Column Editor
0 comment

“நீங்கள் செம்பருத்தியாக நடிப்பவரை தான் கொண்டாடுகிறீர்கள். ஏன் என்னை போன்றவர்களை மதிப்பதில்லை.”

செம்பருத்தி சீரியல் வில்லி நந்தினி தன்னை சீரியல் குழு அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழின் மெகா ஹிட் சீரியலான செம்பருத்தி தொடர் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து 4 மணிநேரம் இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பானது . அதனைத்தொடர்ந்து சீரியலின் வெற்றிக் கொண்டாட்டமும் டெலிகாஸ்ட் ஆகியது. இந்த கொண்டாட்டத்தில் பார்வதியாக நடித்த ஷபானா, ஆதியாக நடித்த அகினி, அகிலாண்டேஸ்வரி ப்ரியா ராமன், சீரியலின் இயக்குனர் ஆகியோர் மிகவும் உருக்கமாக பேசி இருந்தனர். சீரியல் முடிய போவதை அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்தனர்.

ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தது.

கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் வில்லி நந்தினியாக நடித்தவர் நடிகை மெளனிகா சுப்ரமணியம். இவர் இந்த சீரியலில் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். ஆரம்பம் முதலே அகிலாண்டேஸ்வரி குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்து வாழ்ந்து வந்தவர். இவரின் பங்களிப்பு இந்த சீரியலுக்கு மிக மிக முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்படி இருக்கையில் செம்பருத்தி வெற்றி விழா குறித்து மெளனிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் ஸ்டேட்டஸ் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் மெளனிகா கூறியிருப்பதாவது, “செம்பருத்தி சீரியலில் நான் என்னுடைய சிறந்த பங்களிப்பை தந்தேன். அதே போல் சேனலுக்கும் என்னுடைய பெஸ்டை தந்தேன். ஆனால் எனக்கு திரும்பி இவர்கள் எதுவும் தரவில்லை. நீங்கள் செம்பருத்தியாக நடிப்பவரை தான் கொண்டாடுகிறீர்கள். ஏன் என்னை போன்றவர்களை மதிப்பதில்லை.

எதற்கு என்னை அழைத்தீர்கள்? எங்கே எனது மதிப்பிற்குரிய மெடல், நீங்கள் என்னை அசிங்கப்படுத்தி வீட்டீர்கள். நான் சோகமாக இருக்கிறேன். அதே நேரம் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. மக்களுக்கு நன்றி ” என கூறியுள்ளார். சீரியல் முடிந்த மறுநாளே வில்லியாக நடித்த மெளனிகா சீரியல் குழு மற்றும் சேனல் நிர்வாகத்தை பற்றி இப்படி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment