உலக தாய்ப்பால் தினம் இன்று !

by Column Editor
0 comment

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தை பெறும் முதல் ரத்த தானம் என்று, உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்பாலும் தாய்ப்பாசமும் தான்.

தாய்பால் அதிகம் சுரக்க:

தாய்ப்பால் அதிமாக சுரப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஒரு சில இயற்கை உனவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாகும்.

துளசி ஒரு சிறந்த மூலிகை செடி அதை அனைத்து மருந்துகளிலும் பயன்படுத்துவதுண்டு. அத்தகைய துளசியை சாப்பிட்டால் தாய்ப்பாலும் அதிகரிக்கும்.

வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டால் உடலில் இருக்கும் தாய்ப்பாலின் அளவு அதிமாகும்.

காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும்.

கொழுப்பு நிறைந்த நெய், வெண்ணெய் மர்றும் எண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும் பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். மேலும் பசலைச்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றிலும் உள்ளது. பாதாம் மற்றும் முந்திரி போன்றவைகளும் தாப்பாலை அதிகரிப்பவை.

Related Posts

Leave a Comment