டி 20 கிரிக்கெட்டின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்து இமாலய வெற்றி..!

by Column Editor
0 comment

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 234 ரன்கள் சேர்த்து அசத்தியது. சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து அணி சார்பாக பேர்ஸ்டோ 90 ரன்களும் மொயின் அலி 52 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

Related Posts

Leave a Comment