இன்று தாக்கும் சூரிய புயல்! – நாசா விஞ்ஞானிகள்!

by Column Editor
0 comment

இன்று சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இவ்வகை சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக சூரிய காந்த புயல்களால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

கடந்த சில நாட்களாக பூமியை சக்திவாய்ந்த சூரிய புயல் தாக்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வீரியமிக்க சூரிய புயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயல் தாக்கத்தால் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் தொலைதொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment