ஆடி மாதம் அம்மன் கோவில் ஆன்மீக சுற்றுலா! – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

by Column Editor
0 comment

ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டு வருகிறது.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீகரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும்.

ஆடி மாதம் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

காலையில் இருந்து இரவு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்வது, உணவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கட்டணத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் விவரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment