காணாமல் போன இரு மீனவர்கள் சடலமாக மீட்பு!!

by Lifestyle Editor
0 comment

ராமநாதபுரத்தில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன இரு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் ஏர்வாடி அருகே கடலில் மீன் பிடிக்க சென்றபோது காணாமல் போன இரு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மங்களேஸ்வரி நகர் பகுதியில் மலைச்செல்வம் , முனியசாமி , அருண்குமார் மற்றும் காசி சுமன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் . திருமுருகை தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த சூறைக்காற்று வீசி உள்ளது. இதில் படகு கவிழ்ந்துள்ளது . மலைச்செல்வம் , முனியசாமி ஆகிய இரு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். மீதமுள்ள அருண்குமார் மற்றும் காசி சுமன் ஆகிய இருவரும் கடலில் தத்தளித்து போராடி எப்படியோ கரைய வந்து அடைந்துள்ளனர். போலீசார் இருவருக்கும்இது குறித்து மரைன் போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மாயமான மீனவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் முனியசாமி, மலை செல்வம் ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி உயிரிழந்து விட்டதாக தேர்தல் பணியில் போலீசார் உடன் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மீனவர்கள் கடலில் சிக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment