திருமந்திரம் – பாடல் #1459: ஐந்தாம் தந்திரம் – 7.

by Column Editor
0 comment

யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுத்தறி யாமே.

விளக்கம்:

மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்து இருக்கின்ற முறையை போலவே ஜீவாத்மாவிற்கு உள்ளே சிவம் எனும் பரம் பொருளானது கலந்து இருக்கின்றது. பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு, கஸ்தூரியோடு சேர்ந்து இருக்கும் நறுமணம் போல தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்.

Related Posts

Leave a Comment