மகரத்தில் நுழையும் சனி…2025ஆம் ஆண்டு வரை கோடியில் புரளும் 3 ராசியினர்கள்…

by Column Editor
0 comment

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். அதனடிப்படையில் ஜனவரி 17, 2023 அன்று, சனி மீண்டும் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.

இதற்குப் பிறகு, 2025 மார்ச் 29 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இப்போது சனி ஜூலை 12-ம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். இந்த மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஜாக்பாட் யோகம் அடிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல நேரம். வெளியூர் பயணத்தால் அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகம் உண்டாகும். இதனால் நிதி நிலை வலுவாக இருக்கு. வியாபாரத்தில் சரிவை சந்தித்தவர்கள் லாபம் ஈட்ட தொடங்கும் நேரம் இது. மகாலட்சுமியின் அருளால் நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருளை அள்ளி தருவார். யாருக்காவது நல்லது செய்தால் சனி பகவான் உங்களுக்கு நற்பலன்களை கொடுப்பார். வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்பாராத வருமானம் அதிகரிக்கலாம்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலுமே வெற்றியை தருவார். கடின உழைப்பின் மூலம் முழு பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் உணர்ந்து, பணியிடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

Related Posts

Leave a Comment