கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி !!

by Lifestyle Editor
0 comment

கும்பக்கரை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து எப்போதும் காணப்படும் என்பதால் அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.

இந்த சூழலில் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. மேற்குதொடர்ச்சிமலை – வட்டகணல் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும் இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நீர்வரத்து சீரானதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என வனச்சரகர் டேவிட்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment