கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்….650 வருடங்களுக்கு பின் தானாகவே வெளிவந்த அதிசயம்!

by Column Editor
0 comment

இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

பண்டைய இங்கிலாந்தின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று ராவென்சர் ஆட்.

கோட்டை, துறைமுகம் என செழுமையாக இருந்த இந்நகரம் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக 1362 ஆம் ஆண்டு மூழ்கிப்போனது.

கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்….650 வருடங்களுக்கு பின் தானாகவே வெளிவந்த அதிசயம்!

இந்நகரம், மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு கப்பல்களின் ஓய்விடமாகவும் இருந்திருக்கிறது.

இந்நிலையில் யார்க்ஷைரின் அட்லாண்டிஸ் என அழைக்கப்படும் இந்த நகரம் கடலுக்கடியே சுமார் ஒருமைல் ஆழத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

ஆனால், தற்போது கடல்நீருக்கு சில மீட்டர் ஆழத்தில் இந்த நகரத்தை சேர்ந்த பாறைகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆராய்ச்சியில் வெளிவந்த ஆச்சரியம்:
கடலுக்கடியே மூழ்கிப்போனதாக நம்பப்பட்ட நகரத்தின் தற்போதைய நிலைமை குறைத்து ஆய்வில் இறங்கிய போதுதான், கடல் நீரின் கீழ் சில மீட்டர் தூரத்தில் பாறைகள் மற்றும் கற்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதனையடுத்து இங்கே அமைந்திருந்ததாக சொல்லப்படும் துறைமுகத்தின் கோட்டை சுவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தற்போது ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதற்காக சோனார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் குறித்த ஆராய்ச்சி பல நீண்ட நாள் கேள்விகளுக்கு பதிலளிக்கும். கடலுக்கடியே 650 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிப்போன நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment