தமிழ்நாடு மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மருத்துவத்துறை முதன்மை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை மற்றும் குடும்பநலத்துறையின் புதிய செயலாளராக பி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் , கூட்டுறவுத்துறை செயலாளராக உள்ள முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் மற்றும் மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.