வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. . கவனமா இருங்க… – ஸ்டேட் பேங்க் விடுத்த எச்சரிக்கை…

by Column Editor
0 comment

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் அல்லது அழைப்பு வந்தால் அதனை வாடிக்கையாளர்கள் பொருட்படுத்த வேண்டாம் என ஸ்டேட் பேங்கி ஆப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தங்கள் கணக்குகளை அணுக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கேட்கும் போலி எஸ்எம்எஸ்- களுக்கு வாடிக்கையாளர்கள் பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் எஸ்.எம்.எஸ் வாயிலாக ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வாடிக்கையாளரது தனிப்பட்ட விவரங்களை பகிரும்படி கேட்கும் SMS அல்லது இ- மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், அப்படி ஏதேனும் அழைப்புகளோ, குறுஞ்செய்திகளோ, மின்னஞ்சல்களோ வந்தால் உடனடியாக report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகாரளிக்குமாறு எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

அவ்வாறு வரும் SMS- களில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால், அது உங்களை போலியான எஸ்.பி.ஐ இணையதளத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ள எஸ்.பி.ஐ, இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. எஸ்.பி.ஐ மட்டுமின்றி வேறு எந்த வங்கியும் எஸ்எம்எஸ் லிங்க் மூலமாக கேஒய்சியைப் புதுப்பிக்கவோ அல்லது முடிக்கவோ உங்களைக் கேட்காது என்றும் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு பதிலளிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் சேமிப்பு பறிபோகும் வாய்ப்பிருப்பதாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உங்களது வங்கிக் கணக்கிலிருந்து வேறு யாரேனும் பணம் எடுத்திருந்தால், உடனடியாக வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் , அவ்வாறு தெரியப்படுத்தாவிட்டால் இழப்புகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்றும் கூறியுள்ளது. வங்கிக்கு தெரியப்படுத்திய பிறகு மோசடி பரிவர்த்தனை தொடர்ந்தால், அந்த நிதியை வங்கியே உங்களுக்கு திருப்பித்தரவேண்டும்.. ஆகையால் சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்புகள் குறித்தும் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு புகாரளிக்க வேண்டும் என்றும் , மேலும் தகவலுக்கு 14440 என்ற எண்ணை அழைக்குமாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment