வியாழன் கிழமை ‘குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு’ செய்து வர கிடைக்கும் அதிசய பலன்கள்

by Column Editor
0 comment

பொதுவாகவே குரு தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. சிவபெருமானின் 64 ரூபங்களில் ஒன்றான குரு தட்சிணாமூர்த்திக்கு மிகச்சிறப்பான ஆற்றல்கள் உண்டு. குருவுக்கு எல்லாம் குருவாகத் திகழும் குரு தட்சிணாமூர்த்தி அவர்களை வணங்கினால் அரிய பேறு கிட்டும். நவ கிரகங்களுக்கும், தேவர்களுக்கும் அதிபதியாக விளங்கும் குரு தட்சிணாமூர்த்தியை சரணடைந்தால் இருக்கின்ற அத்துணை தோஷங்களும் தவிடு பொடியாகும் என்பது நம்பிக்கை.

தட்சிணம் என்பதற்கு தெற்கு என்பது பொருளாக கூறப்படுகிறது. இவரை தெற்குத் திசை கடவுள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எனவே குரு தட்சிணாமூர்த்தி அவர்களை தெற்குத் திசை நோக்கி கோவில்களில் பிரதிஷ்டை செய்துள்ளதை நம்மால் பார்க்க முடியும். இவரை வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம்.

வீட்டில் உக்கிரமான படங்களையும், அசுரரை கொள்வதைப் போன்ற காளி தேவி படங்களையும், குழலூதும் கிருஷ்ணன் படங்களையும் தவிர மற்ற படங்களை தாராளமாக வைக்கலாம். அவ்வகையில் குருவுக்கு இணையாக இருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்த வழிபாடுகள் செய்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? வாழ்வில் என்னவெல்லாம் அதிசயங்கள் நிகழும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

குரு தட்சிணா மூர்த்தி தென்திசை கடவுளாக போற்றப்படுவதால் தெற்கு திசையை நோக்கி வைப்பது யோகங்களை தரும். பூஜை அறையில் தெற்கு திசையை நோக்கி வைக்க முடியாதவர்கள், கிழக்கு திசையை நோக்கி வைக்கலாம் தவறில்லை. மற்ற திசைகளில் வைக்கக் கூடாது. வியாழன் கிழமை குருவிற்கு உகந்த கிழமையாக இருப்பதால் அந்நாளில் வழிபட நிறைய செல்வங்களை அவர் அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு தட்சிணாமூர்த்தி படத்திற்கு மஞ்சள் மலரால் அலங்காரம் செய்து கீழ்வரும் குரு தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் உச்சரிக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மேலும் புதிய விஷயங்களை நோக்கி பயணிப்பவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் சகல கலைக்கும் வித்வானாக விளங்கும் குரு தட்சிணாமூர்த்தியின் அருளால் உங்களுடைய பணிகள் சிறப்பாக நடைபெறும்.

குரு தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்:

(1) யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ!
(2) மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி!
(3) ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா: மன்தே ச!
(4) வேதாந்தமஹாரஹஸ்யம்!!!

ஸ்தோத்திரம் பொருள்:

சந்திரனை தங்கள் தலையில் சுமந்து இருக்கும் உங்களை தியானம் செய்கின்றவன் நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வரியங்களும், ஏனைய வித்தைகளையும் அடைவான் இறுதியில் வேதாந்தத்தின் பொருளான உங்களையும் அடைவான் என்பது பொருளாகும்.

குரு தட்சிணாமூர்த்தியை வணங்குபவர்களுக்கு வாழ்வில் ஐஸ்வரியங்களும், நீங்கள் அடைய நினைக்கும் கலைகளையும், அறிவு என்னும் ஞானத்தையும் நிச்சயம் உங்களுக்கு அவர் வழங்குவார் என்பதில் ஐயமில்லை. குரு தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியமாக மஞ்சள் நிற கொண்டைக்கடலை படைக்கலாம். இவற்றை தானமாக வழங்குவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கும். வியாழன் கிழமை அன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள். பூஜையில் 9 இழைகள் கொண்ட மஞ்சள் நிற கயிறு வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள். இதுபோல் ஒன்பது வாரங்கள் செய்து வர வறுமை நீங்கி செல்வங்களை அடைவீர்கள். 9 வாரங்கள் முடிந்ததும் கயிரை அவிழ்த்து ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

மேற்கூறிய இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து 9 முறை உச்சரித்து குருவிற்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மிகவும் எளிதான இந்த வழிபாட்டை நாமும் வீட்டிலேயே செய்து நிறைய பலன்களைப் பெற முடியும். உங்கள் ராசிக்கு குரு வக்ர காலத்தில் வழிபடுங்கள். இதனால் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களும், பார் போற்றும் பேரும், புகழும் உண்டாகும் அதிசயங்களும் கட்டாயம் நிகழும்.

Related Posts

Leave a Comment