அஷ்டமியில் பைரவரை வணங்கிட கிடைக்கும் அற்புத பலன்கள் !!

by Column Editor
0 comment

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள்.

இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகள் விலக்கும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். மேலும் கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள்.

Related Posts

Leave a Comment