வயிறுமுட்ட சாப்பிட்டு சோம்பு, சுவீட் பீடா சாப்பிடலாமா?..!

by Column Editor
0 comment

நாம் என்ன உணவை சாப்பிடுகிறோமோ என்பதை பொறுத்தே, பிற உணவுகளை சாப்பிடலாமா? என்ற முடிவை எடுக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை கட்டுப்படுத்த வாழைப்பழம், பால் போன்றவற்றை சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்கும். இந்த ஆலோசனை அசைவ உணவுகளில் பதம்பார்க்கும் நபர்களுக்கு உதவி செய்யும்.

வெற்றிலை என்பது செரிமானத்திற்கு உதவி செய்யும். இதனுடன் சுண்ணாம்பு மற்றும் பாக்கை சேர்த்துக்கொண்டால், குடல் கேன்சர் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இனிப்பு பீடா நல்லது என்றாலும், அதனுள் வைக்கப்படுவது உளர் பப்பாளி என்பதால் பிரச்சனை இல்லை.

எண்ணெயில் பொரித்தெடுத்து அசைவ உணவுகளை சாப்பிடும் போது, அதில் நார்ச்சத்து என்பது இருக்காது. இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் ஜீரண சக்தியை கொண்டுள்ளது என்பதால், அதனை சாப்பிடலாம். இது பசியை தூண்டும். செரிமான சக்தியை ஏற்படுத்தும்.

சாப்பிட்டவுடன் டீ, காபி போன்றவற்றை குடிக்கலாம் ஜிஞ்சர் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை குடிக்கலாம். விருந்திற்கு செல்லும் நேரங்களில் அனைத்து உணவையும் சாப்பிடாமல், தேவையானதை சாப்பிடலாம். அளவுடன் சாப்பிட்டு வளமுடன் வாழலாம்.

Related Posts

Leave a Comment