காலை வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் எடை குறையுமா? தெரியாத பல உண்மைகள்

by Column Editor
0 comment

பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காபி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். குறிப்பாக உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது.

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

அந்தவகையில் காபி எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

உடல் எடையைக் குறைக்குமா?

பிளாக் காபியை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க முடியும்.உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்கவும் பிளாக் காபி உதவுகிறது.

எப்படி உடல் எடை குறைகிறது?

பிளாக் காபி அருந்துவதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இது கெட்ட கொழுப்பை எரிக்க உதவும்.இதனால் கொழுப்பால் உண்டான உடல் பருமன் குறையும்.பசியைத் தூண்டும் ஹார்மோன் ஆன பெப்டைட்டுக்கு எதிராக பிளாக் காபி செயல்படும்.இதனால் தேவையற்ற கலோரிகள் எடுத்துக் கொள்வதும், உடலில் சேர்வதும் தடுக்கப்படும்.

கலோரிகள் அற்ற பிளாக் காபியை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். ஆனால் சர்க்கரை கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நன்மைகள்:

பிளாக் காபி குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
தினமும் 1 அல்லது 2 கப் பிளாக் காபி குடிப்பதால் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பிளாக் காபியில் உள்ள காபின் நரம்பு மண்டலத்தை தூண்டி, இரத்தத்தில் அட்ரீனல் அளவை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

Related Posts

Leave a Comment