171
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு நாள் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலக்கிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து விராட் கோலி எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு நேற்றைய தினத்தில் 4-வது திருமண நாள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், விராட் கோலி காலையிலேயே தனது விலை உயர்ந்த சொகுசு காரை எடுத்து கொண்டு மும்பையில் வலம் வந்துள்ளார்.
இதனையடுத்து, பின்னர் தனது மனைவி, குழந்தை வாமிக்காவுடன் விராட் கோலி திருமண நாளை கொண்டாடி மூவரும் செல்ஃபி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.