விருதுநகரைச் சேர்ந்த பாண்டி பிரபு ஜெயபாரதி தம்பதியினரின் 4 வயது மகள் ஹாசினி. யு.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி கடந்த ஒரு வருடமாக யோகாசனம் கற்று வருகிறார்.
யோகாசனத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் உறு துணையுடன் அர்த்த சமகோனசனா என்ற யோகசனத்தை இருபுறமும் முட்டைகள் மீது கால்களை வைத்தவாறு 31 நிமிடம் .23 நொடிகள் யோகசனம் செய்து சாதனை புரிந்தார்.
இதற்கு முன்பு இதே சாதனையை தஞ்சாவூரை சேர்ந்த 4 வயது சிறுவன் 25 நிமிடம் செய்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இன்று இந்த சாதனையை ஹாசினி முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
நோபிள் வேர்ல்டு ரிகார்ட்ஸ் சென்னை நிர்வாக இயக்குநர் அரவிந்த், திருஞானராமன் சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், பயிற்றுநர் மாலினி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.