ரஜினியை அடுத்து விஜயகாந்த் – சசிகலாவின் அடுத்த ஆட்டம்

by Column Editor
0 comment

சிறையிலிருந்து வெளியே வந்ததும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து விடலாம் என்ற சசிகலாவின் கனவு பொய்யாகிப் போனது. அவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த கூட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலிதாவின் நினைவிடத்தை மூடிவிட்டார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்று சசிகலா நினைத்திருந்தார். அதனால் அதுவரைக்கும் மௌனமாக இருந்தார். ஆனால் ர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், தான் அதிமுகவிற்கு தலைமையேற்று நடத்தி வெற்றிபெற வைக்கிறேன் என்று சொல்லி அதிமுகவின் பொதுச் செயலாளராக முயற்சிகள் மேற்கொண்டார்.

இந்த முயற்சிகளின் முதற்படியாக அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். ஆடியோ மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த சசிகலா, தற்போது பிரபலங்களின் சந்திப்பு மூலம் அதிமுகவிற்கு மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆறாம் தேதி அன்று ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரையும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா.

ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரு பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்றும், தன்னை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று பாஜக தலைமையிடம் பேசச் சொல்லி இந்த சந்திப்பில் சசிகலா ரஜினியிடம் கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டு வந்தாலும், எந்த பதவிக்கு தான் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பொதுச்செயலாளர் பதவியை காலி செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் புதிதாக பதவிகளை உருவாக்கி ஆத்திரமூட்டும் அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார் சசிகலா என்று தகவல். சசிகலா குறித்த விவகாரம் அதிமுகவிற்குள் அலையடித்து வந்த நேரத்தில், அது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் கேள்வி எழுப்பியபோது, பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் என்று கூறுவது வருத்தமளிக்கிறது என்று வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் .

அதன்பின்னர் சசிகலாவை பிரேமலதா நேரில் சந்திக்க இருந்ததாகவும், அப்போது சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்ததால் அந்த சந்திப்பு நிகழவில்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்த பிரேமலதாவுக்கு நன்றி சொல்லவும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவும் அவர்களை சந்திக்க இருக்கிறார் சசிகலா என்றும் தகவல். அதேநேரத்தில் அதிமுகவிற்குள் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே ரஜினியை அடுத்து விஜயகாந்தை சந்திக்கிறார் என்றும் தகவல்.

Related Posts

Leave a Comment