நடிகர் ரகுவரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மகனுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை ரகுவரன் முன்னாள் மனைவி ரேகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்தார் ரகுவரன். முன்னதாக திரை உலகிற்கு நுழைந்த மலையாளப்படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். இதை தொடர்ந்து அதே வருடம் 1982 -ம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள், கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கதாநாயகனாக நடித்து வெளியான பெரும்பாலான படங்கள் இவருக்கு காய் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. இதன்பிறகு முழு நேர எதிர்நாயகன் அவதாரம் எடுத்த ரகுவரன் வில்லனாக மிரட்டிய படங்களில் நாயகனை காட்டிலும் வில்லனின் நடிப்பே பிரபலமானது.
இதில் குறிப்பிடத்தக்கவை பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் உள்ளிட்ட படங்கள் கூறப்படுகிறது. இதில் முதல்வன் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த எதிர்நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.
புரியாத புதிர் படத்தில் சந்தேக புத்தியுள்ள கணவனாக நடித்ததும் சரி, முதல்வன் படத்தில் கொடூர குணம் கொண்ட முதல்வனாக நடித்ததும் சரி, பாட்ஷா படத்தில் தாதாவாக மிரட்டியதுமாகட்டும் பார்ப்பவர்களை பதறவைக்கும் விதமாகவே இவரது நடிப்பு அமைந்திருந்தது. வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான பாவனைகளால் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் ரகுவரன்.
நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
இதன்பிறகு கடந்த 2008-ம் ஆண்டு தனது 49 வது வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த 1958-ம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 11) கேரளாவில் பிறந்தார். இவரது பிறந்தநாள் இன்று 62 வது பிறந்தநாள்.
ரகுவரனின் பிறந்தநாளை முன்னிட்டு மகனுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை ரகுவரன் முன்னாள் மனைவி ரேகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Rohini Molleti (@Rohinimolleti) December 10, 2021