அடேங்கப்பா.. குக் வித் கோமாளி புகழுக்கு இப்படி வெறித்தனமான ரசிகர்களா.!

by Column Editor
0 comment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் புகழ். தனது காமெடியான பேச்சால், செயலால் இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியால் புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதைத்தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் புகழுக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் அவர் குக் வித் கோமாளி அஸ்வினுடன் இணைந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் புகழ் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவரது தீவிர ரசிகர்கள் பார்ப்போர் வியக்கும் வகையில் புகழின் புகைப்படத்தினை தங்களது கைகளில் பச்சை குத்தியுள்ளனர். இந்த புகைப்படத்தை அவர்கள் இணையத்தில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment