புதிய தொழிலை தொடங்கியுள்ள நடிகை நயன்தாரா- அட இதுதான் அவரது புதிய பிசினஸா?

by Column Editor
0 comment

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் அரை டஜன்களுக்கு மேல் படங்கள் உள்ளன. எப்போதும் பிஸியாக படங்கள் நடித்துவரும் இவர் தனது காதலருடனும் சுற்றுலா சென்று வருகிறார்.

அதற்கு இடையில் நயன்தாரா தொழில்களிலும் அக்கறை காட்டி வருகிறார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள்.

இதுதவிர நயன்தாரா சாய் வாலா என்ற டீ கம்பெனியில் பார்ட்னராக இருக்கிறார்.

தற்போது அழகு சாதன பொருளை தயாரிக்கவும் களமிறங்கியுள்ளார்.

பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து நயன்தாரா தி லிப் பாம் கம்பெனி இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்நிறுவனம், நூற்றுக்கணக்கான வகைகளில் லிப் பாம்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளது.

Related Posts

Leave a Comment