2022 புத்தாண்டு: மேஷ ராசிக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

by Column Editor
0 comment

பிறக்கும் 2022 புத்தாண்டு ஒவ்வெருவருக்கும் எவ்வாறு அமையும் என்பது குறித்து பல கேள்விகள் எழும்பும்.

குரு, சனி, ராகு – கேது உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியினை வைத்து பிறக்கும் புதிய ஆண்டு எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதன்படி அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் அடங்கிய மேஷ ராசிக்கு இந்த புதிய ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் இயற்கையிலேயே தைரியம், நம்பிக்கை, வலிமை, ஆற்றல் கொண்ட நபராக திகழ்வீர்கள். புத்தாண்டு பலன்கள் குரு, சனி, ராகு – கேது போன்ற முக்கிய கிரக பெயர்ச்சியின் அடிப்படையில் சொல்லப்படுவதுண்டு.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் ஏப்ரல் 13ம் தேதி வரை லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இந்த மூன்று மாத காலத்தில் நீங்கள் சுப காரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அதன் பின்னர் அதிசாரமாக 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு செல்வதால், உங்கள் முயற்சிக்கு வேகமாக பலன் கிடைக்காமல் தாமதப்படுவதுடன் வீண் செலவுகள் ஏற்படுவதுடன், நீங்கள் நினைத்த அளவிற்கு பொருளாதா மேம்பாடு என்பது சற்று சிரமமே.

மேலும் 12ம் இடத்திலிருந்து குரு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் உங்களின் வாழ்க்கையில் வாய்ப்பு, வசதிகள் ஏற்படுவதுடன், ஆரோக்கியம் சிறந்து, எதிர்ப்பினை சமாளிக்கும் தைரியமும் கிடைக்கும்.

தற்போது மேஷ ராசிக்கு 2, 8ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய ராகு – கேது எனும் சர்ப்ப கிரகங்கள் திருக்கணிதப் படி 12.04.2022ம் தேதி ராகு உங்கள் ராசிக்கும், கேது 7ம் இடத்திற்கும் பெயர்ச்சியாவதால், சற்று நிதானமாக முடிவு எடுப்பது அவசியமாகும்.

சனி பகவான் 2022ம் ஆண்டு மேஷ ராசிக்கு 10ம் இடமான கர்ம, தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வார். இந்த காலத்தில் கவனமாக இருப்பதுடன் பெரிய அளவில் முதலீடுகளை சற்று சிந்தித்தும், ஜாதக பலன்களை அறிந்தும் செய்ய வேண்டும்.

இருப்பினும் உங்களின் முயற்சியையோ, நம்பிக்கையையோ கைவிடாமல் கடினமாக உழைத்தால், ‘மெய் வருத்தக் கூலி தரும்’ என்பதைப் போல உங்கள் உழைப்புக்குக் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 29.04.2022 முதல் 12.07.2022 வரை சனி அதிசாரமாக லாப ஸ்தானத்திற்கு செல்வதால் இந்த இரண்டரை மாத காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். இருப்பினும் எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :
கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையுடன் பேசுவதுடன், நிதானத்துடன் செயல்பட்டால் முயற்சிக்கு முன்னேற்றமான பலன்களை பெற்றிட முடியும்.

வழிபாடு :
உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடும், முருகன் கோயில் வழிபாடும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

Related Posts

Leave a Comment