சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகிக் கொண்டே செல்ல 12 ராசிக்காரர்களும் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்

by Column Editor
0 comment

வாழ்வில் மனிதனாக பிறந்து விட்டால் ஒவ்வொரு விஷயங்களிலும் தன் கர்ம வினைக்கு ஏற்ப வரக்கூடிய பலன்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது சாஸ்திரம். இருப்பினும் நம் கர்மவினை குறைந்து பிறவிப்பயன் அடைய, நம் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க, சங்கடங்கள் தீர, செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய எளிய அதி சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வருங்கள் பதிவிற்குள் போகலாம்!

முதல் மூன்று ராசியினர் அதாவது மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் முருகனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் பெறலாம்.

முருகன் மந்திரம்:

பேர் ஆதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா!சேரா நிருதர் குல கலகா! சேவற்கொடியாய்! திருச்செந்தூர்த் தேவா! தேவர் சிறைமீட்ட செல்வா! என்று உன் திருமுகத்தைப்பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா! வா, வா, என்று உன்னைப் போற்றப் பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்வாராது இருக்க வழக்கு உண்டோ! வடிவேல் முருகா! வருகவே! வளரும் களபக் குரும்பை முலை வள்ளி கணவா! வருகவே!

அடுத்ததாக இருக்கும் மூன்று ராசியினர் அதாவது கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் இந்த அதி சக்தி வாய்ந்த பெருமாள் மந்திரத்தை தினமும் உச்சரித்து வர செல்வம் பெருக்கெடுக்கும்.

பெருமாள் மந்திரம்:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று! தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றாய் இசைந்து!

துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இந்த சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரத்தை தினமும் உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

நரசிம்மர் மந்திரம்:

அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன் அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன் தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன் துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன் ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன் வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன் பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன்!

மகரம், கும்பம், மீனம் ஆகிய கடைசி மூன்று ராசிக்காரர்கள் கீழ்வரும் அதிசக்தி வாய்ந்த அனுமன் மந்திரத்தை தினமும் காலையில் எழுந்ததும் உச்சரித்து வந்தால் கோடி நலன்கள் உண்டாகும்.

அனுமன் மந்திரம்:

விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே!கண்டேன் ஒரு சீதையையே கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான் வென்றேன் எனவே விழைந்தானையே நான் கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே! சரமே தொளையா சகமே மறவா சரீரா அனுமா ஜமதக் கினிநீ உரமே உறவே உறவோய் பெரியோய் உயர்வே அருள்வாய் திருமாருதியே!

Related Posts

Leave a Comment