தினமும் இந்த ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடையை கிடுகிடுவென குறையுமாம்!

by Column Editor
0 comment

இன்று நிறைய பேர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒரு சிறப்பான வழி ஜூஸ்கள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் ஆரஞ்சு ஜூஸ்.

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸில் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது நிச்சயமான உண்மையாகும்.

வாய் துர்நாற்றம்

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் சரியாகும். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.

நெஞ்சு வலி

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் உள்ள ஹெர்ஸ்பெரிடின் என்ற பொருள் இதயத்தில் அடைப்பு உண்டாகாமல் தடுக்கிறது. இதனால் நெஞ்சு வலி வராமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைய

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது.

அல்சர் நோயை குணப்படுத்த

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி அக்சிடெண்ட் விரைவில் முதுமை அடைவதை தள்ளி இளமையான சருமத்தை தருகிறது. மேலும் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து சோடியம் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பெற

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்க

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

Related Posts

Leave a Comment