அர்ஜுன் கையில் குழந்தையாக புனீத் ராஜ்குமார்

by Column Editor
0 comment

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆரோக்கியமாக இருந்த புனீத் இறந்துவிட்டார் என்பதையே பலராலும் இன்னும் நம்ப முடியவில்லை.

புனீத்தின் உடல் பெங்களூரில் இருக்கும் கண்டீரவா ஸ்டுடியோஸில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனீத்தின் சமாதிக்கு தினமும் ஏகப்பட்ட ரசிகர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் சரியாகும் என்பார்கள். ஆனால் புனீத் விஷயத்தில் அப்படி இல்லை என்று அவரின் அண்ணன் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் புனீத் சிறுவனாக இருந்தபோது அவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஃபீல் செய்திருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

அர்ஜுனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டுள்ளனர். அப்புவை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். அப்பு இறந்த பிறகே அவர் செய்த தான, தர்மங்கள் பற்றி தெரிய வந்தது. சத்தமில்லாமல் பலருக்கு உதவி செய்த நல்ல மனிதர் இப்படி சென்றுவீட்டாரே என்கிறார்கள்.

புனீத் ராஜ்குமாரின் சிறுவயது புகைப்படங்களை அவரின் மற்றொரு அண்ணனான ராகவேந்திரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment