அடேங்கப்பா.. ஒரே பிஸிதான்! பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி என்னவெல்லாம் செய்துள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

by Column Editor
0 comment

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் மோதல், வாக்குவாதங்கள், சண்டைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. இந்த பிக்பாஸ் சீசனில் பல்வேறு வித்தியாசமான துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் ஐக்கி பெர்ரி. தஞ்சாவூரை சேர்ந்த இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் முடியெல்லாம் கலர் செய்து பார்ப்பதற்கு ஃபாரின் ரிட்டன் போல இருப்பார். ஐக்கி பெர்ரி மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக உள்ளார். மேலும் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.வெளிநாடுகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இவர் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஐக்கி பெர்ரி தனது சக போட்டியாளரான இசைவாணி மற்றும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு சில நாட்களிலேயே வெளியேறிய நமிதா ஆகியோரை சந்தித்து அங்கிருந்து ரசிகர்களுடன் நேரலையில் பேசியுள்ளார். மேலும் இமான் அண்ணாச்சியின் வீட்டிற்கும் திடீர் விசிட் அடித்து அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அவர்களுடன் உற்சாகமாக நேரம் செலவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment