இன்றைய ராசி பலன்கள்(09-12-2021)

by Column Editor
0 comment

மேஷம்:

தள்ளிச்சென்ற காரியம் தானாக முடிவடையும் நாள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

ரிஷபம்:

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

மிதுனம்:

விரயங்கள் கூடும் நாள். வீட்டிலுள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்:

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டா்கள். விரயங்கள், வீடு மாற்றங்கள் போன்றவை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்:

சச்சரவுகள் அகலும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கன்னி:

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியென்ன என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

துலாம்:

வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். விரயங்கள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

விருச்சகம்:

தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் தொடர்பாக வரும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு:

உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். புதிய முயற்சி வெற்றி கிட்டும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் உங்கள் மூலம் ஒருசில காரியங்களை சாதித்துக் கொள்வர்.

மகரம்:

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

கும்பம்:

அதிர்ஷ்டமான நாள். அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும்.

மீனம்:

தீட்டிய திட்டங்களில் வெற்றி பெறும் நாள். திடீர் வரவு உண்டு. உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெற சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

Related Posts

Leave a Comment