எதிர்காலத்தில் நடக்க உள்ளதை முன்பே கணிக்க கூடிய சக்தி சில ராசிகளுக்கு உள்ளது.
அவர்களுக்கு உள்ளுணர்வுகள் மூலம் ஆபத்தை கூட உணர முடியுமாம்.
அந்த நபர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளை எந்த விளக்கமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.
மீனம்:
உண்மையான உள்ளுணர்வு கொண்டவர்கள். ஏதேனும் அசாதாரண நிகழ்வு நிகழப் போகிறது என்பதை இவர்களின் உள்ளுணர்வு பெரும்பாலான நேரங்களில் உணர்த்திவிடும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினரிடம் எதையும் மறைப்பது மிகவும் கடினம். சுயமாக அறியக்கூடிய உள்ளுணர்வு கொண்ட இவர்களை யாராலும் அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியாது.
துலாம்:
துலாம் ராசியினர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஓரளவு எளிதில் உணரக்கூடியவர்கள். எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையை கவனித்து அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வார்கள்.
மகரம்:
இவர்கள் எதிர்மறையான விஷயம் நடக்கும் என்பதை எளிதில் உணரக்கூடியவர்கள். பெரும்பாலும் இவர்களின் உள்ளுணர்வைக் கேட்டுத் தான் செயல்படுவார்கள்.