தெரு ஓரமாக இறந்து கிடந்த பிரபல இயக்குனர்- சோகத்தின் உச்சம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எம்.தியாகராஜன்.
இவர் விஜயகாந்தின் 150வது படமான மாநகர காவல் என்ற படத்தை இயக்கியவர். இந்த ஹிட் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
இயக்குனர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார்.
அவரை அடையாளம் கண்டவர்கள் போலீசில் தகவல் அளிக்க இறந்தவர் இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது.