மேஷம்:
நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களிடம் தொடர்பு கொண்டு பேசலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்:
பற்றாக்குறை அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். உத்தியோக மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும்.
மிதுனம்:
வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் உடனிருப்பவர்களால் பிரச்சினைகள் உருவாகும்.
கடகம்:
தொட்டது துலங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்:
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். மாற்றுமருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பயணத்தால் பலன் கிட்டும்.
கன்னி:
சோர்வுகள் அகன்று துடிப்படன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
துலாம்:
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளால் நன்மை ஏற்படும்.
விருச்சகம்:
மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு:
மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்:
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். உடன்பிறப்புகளின் ஆதரவால் ஒரு நல்ல காரியம் நடைபெறும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
கும்பம்:
நெருக்கடி நிலை அகலும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
மீனம்:
முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும் நாள். புதியவர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.