2022 புத்தாண்டு பலன்கள்; இந்த 4 ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம் என்னென்ன?

by Column Editor
0 comment

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிலாவது எந்த ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். இதனிடையில், இந்த 4 ராசிகளான தனுசு, மகரம், கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு :

குரு பகவான் அருள் கொண்ட தனுசு ராசியினர்களுக்கு இதுவரை ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்த உங்களுக்கு 2022-ம் ஆண்டு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக கவலைகள் நீங்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

பிறக்கப்போகும் புத்தாண்டில் குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார். இதனால், ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கேது லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி அடையப்போவதால் உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.ஆரம்பமே அமர்களம் என்பது போல உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புரமோசன் கிடைக்கும். அடுத்ததாக, நான்காம் வீட்டில் குரு பயணம் செய்யும் காலத்தில் குருவின் பார்வை பத்தாம் வீட்டில் பதியும் போது புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும்.

சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். 2022-ம் ஆண்டு ஏழரை சனி விலகும் காலத்தில் திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். வரன் பேசி முடிவு செய்யலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கை கூடி வரும். திருமணமாகி சண்டை சச்சரவினால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள்.புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம் :

கும்ப ராசியினர்களுக்கு 2022-ம் ஆண்டு ஜென்ம குரு குடும்ப குரு என மாறி மாறி அமைகிறது. சனி ஜென்ம சனியாக வந்து அமரப்போகிறார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். வேலையில் மாற்றம் வேண்டாம். அனுபவங்களே உங்களுக்கு படிப்பினையைத் தரும் காலமாகும்.

மேலும், வேலையில் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அரசு வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்களில் ஆண்டின் முற்பகுதியில் தடைகள் ஏற்படலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம் வெற்றியில் முடியும்.

2022-ம் ஆண்டு வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அகலக்கால் வைத்து பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். அலட்சியம் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பயணங்களில் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வீடு சொத்து வாங்க இது ஏற்ற தருணம் அல்ல. வண்டி வாகனம் வாங்க சரியான நேரம் அல்ல. இந்த குல தெய்வ வழிபாடு குடும்பத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும்.

மகரம் :

மகர ராசியினர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டில் சங்கடங்கள் நீங்கி சாதனை புரியும் ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவானும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. நான்கில் ராகு பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பின் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீண் பழிகள் நீங்கும். அவப்பெயர்கள் விலகும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல வரன் கை கூடி வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த போராட்டங்கள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்வலி பிரச்சினைகள் வரலாம் விழிப்புணர்வு அவசியம்.

மீனம் :

மீன ராசியினர்களுக்கு 2022-ம் ஆண்டில் அதிசாரமாக ஜென்ம குருவாக மாறுகிறார். சனி பகவான் விரைய சனியாக பயணத்தை தொடங்குகிறார். இதனால் ராகு இரண்டாவது வீட்டிலும் கேது எட்டாவது வீட்டிலும் பயணம் செய்வதால் கவனமும் விழிப்புணர்வும் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது.

சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யப்போவதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.முதலீடுகளில் கவனமும் நிதானமும் தேவை. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசினாலும் இடையூறுகள் ஏற்படும். வருட பிற்பகுதியில் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதியினருக்கு தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு வரமாக புத்திரபாக்கியம் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment